Ads (728x90)

பொதுமக்களுக்கான 24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை திட்டமிட்டபடி இன்று 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஒரு நாள் சேவைக்கான விண்ணப்பங்கள் காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஒரு நாள் சேவையின் கீழ் அன்றைய தினத்திற்கான முன்பதிவுகளைச் செய்த விண்ணப்பதாரர்களும், அவசர அல்லது முன்னுரிமைத் தேவைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களும் இந்தக் காலகட்டத்தில் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

சாதாரண சேவைக்கான விண்ணப்பங்கள் தலைமை அலுவலகத்தில் காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் சாதாரண மற்றும் ஒரு நாள் சேவை விண்ணப்பங்கள் இரண்டும் முன்பு நடைமுறையில் இருந்ததைப் போலவே, காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பிராந்திய அலுவலகங்களில் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget