Ads (728x90)

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஸ்கைப் சேவையை மே மாதம் முதல் நிறுத்துவதாக 'மைக்ரோசொப்ட்' நிறுவனம் அறிவித்துள்ளது.

இலவச வீடியோ கால் வசதியை 21 ஆண்டுகளாக வழங்கி வந்த ’ஸ்கைப்’ தளத்தை, ஸ்வீடன் மற்றும் எஸ்டோனியாவைச் சேர்ந்த மென்பொறியாளர்கள் 2003 ஆம் ஆண்டு உருவாக்கினர். தொடர்ந்து வேறு நிறுவனங்களுக்கு கைமாறிய ‘ஸ்கைப்’ தளம், கடந்த 2011 ஆம் ஆண்டு 8.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ‘மைக்ரோசொப்ட்’  நிறுவனம் வாங்கியது.

இதற்கமைவாக தற்போது ஸ்கைப்பை பயன்படுத்துவோர் தங்கள் பழைய அழைப்புத் தகவலைப் பராமரிக்கும் அதேவேளையில், மைக்ரோசொப்டுடன் இணைக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக தற்போது ஸ்கைப்பை பயன்படுத்துவோர் அவர்களின் கடவுச்சொல்லைக்கொண்டு அதேபோன்று Microsoft Teams வுடன் இணைந்துகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு கொவிட் தொற்று நோய்க்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து வந்தது ஸ்கைப்பின் பயனர் தளத்திற்கு பதிலாக, Zoom போன்ற புதிய காணொலி தொழில் நுட்பங்கள் அதிகரித்தன.

உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தங்கள் கணினிகள் மூலம் இலவச காணொலி மற்றும் ஓடியோ அழைப்புகளை மேற்கொள்வதை ஸ்கைப் சாத்தியமாக்கியது.


Post a Comment

Recent News

Recent Posts Widget