Ads (728x90)

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் அவர்களின் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டு நேற்று நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் வியட்நாமின் நோய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் வெளியுறவுத் துறை பிரதி அமைச்சருமான நுயென் மான் குவோங் உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் அமோகமாக வரவேற்கப்பட்டனர்.

இந்த வரவேற்பு நிகழ்வில் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டேம், வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் போசித பெரேரா மற்றும் இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டனர்

இன்று பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ கட்சியின் மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

நாளை வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும் ஈடுபட உள்ளார்.

தொடர்ந்து மே 06 ஆம் திகதி ஹோ சி மிங் நகரில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget