Ads (728x90)

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், ஷ்ரேயா சரண் என நடிகர் பட்டாளமே நடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படம் மே 1ம் திகதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிக வைரல் ஆனது.

அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் வெளிவந்துள்ள ரெட்ரோ திரைப்படம் எப்படி உள்ளது? சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கு கங்குவா ஏற்படுத்திய ஏமாற்றத்துக்கு ரெட்ரோ திரைப்படம் ஆறுதல் அளித்துள்ளதா?

பாரிவேல் கண்ணன் என்னும் கதாபாத்திரத்தில் வரும் சூர்யா, திலகன் என்னும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் வரும் ஜோஜு ஜார்ஜால் ஒரு மகனை போல வளர்க்கப்படுகிறார். திலகனுக்கு வலதுகரமாக சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கிறது.

கேங்ஸ்டர் வாழ்க்கையில் இருந்து விலகி வாழ்வேன் என சத்தியம் செய்யும் சூர்யா, ருக்மிணி கதாபாத்திரத்தில் வரும் பூஜா ஹெக்டேவை திருமணம் செய்கிறார்.

ஆனால் சூர்யாவால் இந்த சத்தியத்தை காப்பாற்ற முடிந்ததா? அவரது கடந்தகாலம் எப்படி அவரை விடாமல் பின்தொடர்ந்து வருகிறது என்பதுதான் மீதிக்கதை.

படத்தில் பாராட்டத்தக்க விஷயம், தொடக்கம் முதல் இறுதி வரை ஆக்‌ஷனுக்கான களம் என்றாலும் கூட, கதையை காதல் கோணத்தில் எழுதியிருந்த விதம்தான் பாராட்டத்தக்கது. இன்னும் சொல்லப் போனால் ஆக்‌ஷன் காட்சிகளை விட எந்தவித செயற்கைத் தனமும், வசனங்களும் இல்லாத காதல் காட்சிகள் அதிக சுவாரஸ்யத்தை தருகின்றன. 


Post a Comment

Recent News

Recent Posts Widget