Ads (728x90)

 2025 உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டி ஜூன் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை லண்டனில் உள்ள லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில் 282 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

27 வருட நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் ஐ.சி.சி. போட்டியின் சாம்பியன்களாக முடிசூட்டப்பட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget