Ads (728x90)

காலிஸ்தானி தீவிரவாதிகள் இந்தியாவை முதன்மையாக குறிவைத்து வன்முறைச் செயல்களை ஊக்குவிப்பதற்கும், நிதி திரட்டுவதற்கும் மற்றும் திட்டமிடுவதற்கும் கனேடிய மண்ணை ஒரு தளமாக தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக கனடான முதல் முறையாக அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

கனடாவின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பான கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் அண்மைய வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வெளிப்பாடு இந்தியாவுடனான அதன் உணர்திறன் மிக்க இராஜதந்திர உறவின் பின்னணியில் கனடாவிற்குள் வெளிநாட்டு தலையீடு மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த கவலைகளை மீண்டும் தூண்டியுள்ளது.

பல ஆண்டுகளாக இந்தியா கனேடிய மண்ணில் இருந்து செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகள் குறித்து கவலைகளை எழுப்பி வருகிறது. ஆனால் கனடா பெரும்பாலும் இந்த பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்தது.

இந்த நிலையில் கனடாவின் உளவுத்துறை பாதுகாப்பு அமைப்பு, புது டெல்லி நீண்ட காலமாக முன்வைத்து வந்த குற்றச்சாட்டினை ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், கனேடியப் பிரதமர் மார்க் கார்னியும் கனடாவில் நடந்த G7 உச்சிமாநாட்டில் முதன்முறையாக நேரில் சந்தித்ததன் பின்னர் கனடாவின் உளவுத்துறை பாதுகாப்பு அமைப்பின் இந்த வெளிப்பாடுகள் வந்துள்ளன.

2023 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மோசமடைந்திருந்த விரிசல் அடைந்த இராஜதந்திர உறவுகளை சரிசெய்வதில் அவர்களின் சந்திப்பு ஒரு முக்கியமான படியாக அமைந்துள்ளது.

1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டுவெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பின்னர், பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கம் இந்தியாவின் கவலையின் ஒரு குறிப்பிட்ட மையமாக உள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை தொடர்பாக மே 2024 இல் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget