Ads (728x90)

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கி பணிப்பாளர் தகாபுமி கடோனோ மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின்போது புதிய கல்வி சீர்திருத்தங்களுக்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை கல்வியில் எதிர்வரும் ஆண்டிற்கான புதிய மறுசீரமைப்பை செயல்படுத்துவது, சம்பந்தப்பட்ட சவால்கள் உள்ளிட்டவற்றை பிரதமர், ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு விளக்கியுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த தங்களின் திருப்தியைத் தெரிவித்து, ஆசிரியர் பயிற்சி, உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப முன்னேற்றம் உள்ளிட்ட கல்வித் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget