ஜனாதிபதி நிதியத்தில் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல், கடந்த பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களாலும் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் இவ்வாறு பரவலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வறுமை ஒழிப்பு நிவாரணங்கள்,,கல்விப் புலமைப்பரிசில் வழங்கல், கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகளை பாராட்டுதல், விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை, தேசிய அளவில் அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களைப் பாராட்டுதல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் செயற்படுத்தப்படும் அனைத்து சேவைகளுக்கும், பொதுமக்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும்.
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு மேற்கொண்ட தீர்மானத்தின் படி 47 வருட காலமாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும், பிரதேச செயலகங்கள் மூலம் இலங்கையின் அணைத்து பிரதேசங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
Post a Comment