இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் பங்குபற்றியிருந்தனர்.
உலக வங்கி அதிகாரிகள் வடக்கு-கிழக்கு மாகாணங்களிற்கு பல தடவைகள் மேற்கொண்ட பயணங்கள் மற்றும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 8 வலயங்களும், கிழக்கு மாகாணத்தில் 7 வலயங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.யாழ். மாவட்டத்தில் 3 வலயங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 வலயங்களும் வடக்கின் ஏனைய 3 மாவட்டங்களில் தலா ஒரு வலயங்களிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் கொக்கிளாய் பாலமும் முன்மொழியப்பட்டுள்ளது. உலக வங்கியால் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. முதல் கட்ட செயற்படுத்தலுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்தக் கலந்துரையாடலில் ஒவ்வொரு மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் தங்களது மேலதிக தேவைப்படுத்தல்களையும் முன்வைத்தனர். எதிர்காலத்தில் உலக வங்கியால் அவற்றை கவனத்திலெடுக்குமாறும் கோரிக்கையை முன்வைத்தனர்.
உலக வங்கியின் செயற்றிட்டத்தை தொய்வின்றி விரைவாக செயற்படுத்துவதற்காக இணைப்புக்குழு ஒன்றும் முன்மொழியப்பட்டுள்ளது.



Post a Comment