தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு இந்த அரசாங்கம் முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தையும் இரத்துச் செய்வதற்கு வெளிப்படையான தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து நடத்தவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குரிய எவ்வித நடவடிக்கைகளும் விரைவாக முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Post a Comment