2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை தாங்களாகவே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தனிபட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசித்து விண்ணப்பிக்கலாம்.
2025 ஜூலை 21ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment