Ads (728x90)

பசுக்களை இறக்குமதி செய்வது என்ற போர்வையில் வயதான பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஹரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் 110 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கால்நடை இறக்குமதி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இந்த விடயத்தில் எவருக்கும் கருணை காட்டப்படமாட்டாது என்றும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget