Ads (728x90)

வடக்கு மாகாணத்தில் காணிகளை சுவீகரிப்பதற்காக 28.03.2025 திகதியிட்ட 2430/25 இலக்க வர்த்தமானியை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு நேற்று விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக வலுவிழக்கச் செய்யும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாணத்திலுள்ள உரிமை கோரப்படாத 5,941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பட்டுள்ளது. 

குறித்த காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும், இந்தக் காணிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உரிமை கோருபவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget