Ads (728x90)

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் வவுனியா மாநகரசபையின் புதிய முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா மாநகரசபைக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. 

இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது.

இந்த வாக்களிப்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பாக போட்டியிட்ட சு. காண்டீபன் 11 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி சார்பாகப் போட்டியிட்ட சிவசோதி சிவசங்கர் 10 வாக்குகளையும் பெற்றனர். 

பிரதி முதல்வராக ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget