இலங்கைக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த பின்னர் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்குமாறு கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் தன்பாலின உறவுகளை குற்றம் அற்றதாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் காவல்துறையில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகள் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியான ஈடுபாட்டை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment