Ads (728x90)

நாட்டின் சுமார் 10,000 மக்களை உள்ளடக்கிய 2,000 ஆரம்ப சுகாதார சேவை மையத்தை நிறுவுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

8 பணியாளர்களுடன் செயல்படவுள்ள 100 ஆரம்ப சுகாதார மையங்களை இந்த ஆண்டுக்குள் நிறுவ சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2,000 ஆரம்ப சுகாதார சேவை மையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவைகளை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த சேவையாக வழங்குவதை பிரதான நோக்கமாக கொண்டு, முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் நிறுவப்படவுள்ள ஆரம்ப சுகாதார மையத் திட்டம் குறித்து பொது சுகாதார தாதியர் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்டறை நேற்று இலங்கை அறக்கட்டளை கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இதனை தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget