Ads (728x90)

மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு உள்ளாவதை தடுப்பதற்கு விசேட குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இக்குழுக்கள் பாடசாலை மட்டத்தில் நிறுவப்படவுள்ளன. இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

25 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. சுமார் 1,080 பாடசாலைகளில் ஏற்கனவே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

ஒவ்வொரு குழுவிலும் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதிநிதி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget