காலை 7.00 மணிக்கு இடம்பெற்று வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து நாகபூசணி அம்மன் உள்வீதியுலா வந்து காலை 8.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
அதனை தொடர்ந்து காலை 9.00 மணிக்கு தேரில் வெளிவீதியுலா வந்து காலை 10.30 மணிக்கு தேர் இருப்பிடத்தை அடைந்தது.
தேர்த்திருவிழாவில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர்நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நாகபூசணி அம்மனின் அருட்காட்சியை கண்டுகளித்தனர்
அதேவேளை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, விசேட படகு சேவைகள், பஸ் சேவைகள் இடம்பெற்றதுடன், சென் ஜோன்ஸ் அம்பிபியூலன்ஸ் முதலுதவி படையினர், சாரணர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரும் சேவையில் ஈடுபட்டிருந்தனர்.
Post a Comment