முன்னதாக இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 வீத வரி விதித்திருந்தது. அமெரிக்க ஜனாதிபதியாக 2 ஆவது முறையாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதன் பின்னர் 44 வீதமாக அறிவித்திருந்தார்.
தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.
வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக இலங்கை தமது வரியை அதிகரிப்பதற்குத் தீர்மானித்தால் அதற்கு நிகராக தங்களின் 30 சதவீதம் என்ற புதிய வரி அதிகரிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் அதில் இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால உறவுகளைப் பொறுத்து, கட்டணங்களை 'மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி' சரி செய்ய முடியும் என்பதையும் ட்ரம்ப் தமது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Post a Comment