ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் சுமார் 5 தொன்களை கடந்த 5 மாதங்களில் எம்மால் கைப்பற்ற முடிந்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் போதைப்பொருட்களை கைப்பற்றும் வகையில் பொலிஸ் திணைக்களம் சார்பில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கைக்குள் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் பாரிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். போதைப்பொருட்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.
போதைப் பொருட்களுக்கு அடிமையான நான்கு இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு நாட்டில் வாழ்கின்றார்கள். தற்போது 4 மத்திய நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 140 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு வழங்கும் வசதிகள் காணப்படுகின்றன.
எனவே இந்த வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் மாகாணத்தில் ஒரு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை ஸ்தபிக்க நாம் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Post a Comment