எமது நாட்டில் மொழி உரிமைக்கு மதிப்பளிப்பதற்கு முடியாமல் போனமை சிறிய தவறு அல்ல என்பதை நாங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இந்த படிப்பினையை சரியாக கற்றுக் கொள்ளாவிட்டால் வரலாறு மீண்டும் வருவது நிச்சயமாகும்.
மொழி என்பது ஒரு தொழில்நுட்ப விடயம் அல்ல என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். அதேபோன்று தொடர்பு சாதனத்தை விட அதிகமான தெளிவை மொழிமூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
மொழி என்பது ஒரு நபரின் அடையாளத்தின் இதயம். அது நினைவின் குரலும் கூட. மரியாதையின் தாளம். சிந்தனையின் கட்டமைப்பு. எமது நாட்டை உற்றுநோக்கும்போது நீதி, நல்லிணக்கம் மற்றும் அரசின் தூய்மை தன்மையின் லிட்மஸ் பரிசோதனையாக மொழியை அறிமுகப்படுத்தலாம்.
ஒருவருக்கு தனக்கு நெருக்கமான மொழியில் கருத்து தெரிவிக்க அல்லது செவிசாய்ப்பதற்கு இருக்கும் சந்தர்ப்பம் இல்லை என்றால், அந்த சமூகத்தில் மனிதாபிமானம் நிராகரிக்கப்படுகிறது என்றே அதன் மூலம் தெரிகிறது.
எமது வரலாற்றை திரும்பிப் பார்ப்போமானால், அது பாரிய அநீதியை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, இனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மை, ஐக்கியமின்மை மற்றும் இறுதியில் ஆயுதம் தாங்கிய மோதலுக்கு செல்வதற்கும் காரணமாகியது. இந்த படிப்பினையை சரியாக கற்றுக் கொள்ளாவிட்டால் வரலாறு மீண்டும் வருவது நிச்சயமாகும். அதனால் அதனை நாங்கள் மீண்டும் செய்யக்கூடாத சிறந்த பாடமாக, ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும்.
சமத்துவம் இல்லாமல் நீடித்த அமைதி இருக்க முடியாது. அரசு தனது மக்களின் மொழியை மதிக்காவிட்டால் சமத்துவம் ஏற்படப்போவதில்லை. நாங்கள் அதனை புரிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இருந்து அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இரண்டு மொழிகளிலும் விண்ணப்பங்களை விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் எனறார்.
அரச கரும மொழிகள் வாரத்தின் இறுதிநாள் நிகழ்வு நேற்று இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment