Ads (728x90)

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப்பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த 809 பாடசாலைகளும் பெயரளவில் மட்டுமே தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சமீபத்தில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்கக் கணக்குகள் பற்றிய முன்னிலையான போதே இந்த விடயங்கள் வௌியாகியுள்ளன.

கடந்த அரசாங்கத்தின் போது செயல்படுத்தப்பட்ட தேசிய பாடசாலை எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்கும் திட்டம் மற்றும் இராஜாங்க அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட 72 திட்டங்கள் தொடர்பாக 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget