Ads (728x90)

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து ஒரே நாளில் 11 என்புக்கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இந்த என்புக்கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டதரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 என்புக்கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 90  என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சித்துப்பாத்தியில் புதிய இடமொன்றை அகழ்வது தொடர்பில் அதிநவீன ஸ்கேன் இயந்திரங்கள் வர வழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அகழ்ந்தெடுக்கப்படவுள்ள புதிய பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget