Ads (728x90)

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதியும், மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காக 53,000 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் அபிவிருத்தி திட்டங்களுக்கு குறித்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

சில உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

அவ்வாறாயின் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு திருப்பியனுப்ப நேரிடும் எனவும் பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget