கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி துடுப்பாடத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி 133 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 16.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2:1 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.
Post a Comment