பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2014 செப்டம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விளையாட்டு கழகங்களுக்கு 14,000 கேரம் போர்ட் மற்றும் 14,000 தாம் போர்ட் ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது 39 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டு பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய குற்றமிழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி சட்ட மாஅதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்காண்டோ ஆகிய இருவரையும் அடுத்த வழக்கு தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment