முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஏற்கனவே முடிவு எடுத்துள்ளது. இது நியாயமற்றது. தங்கள் மருந்துகளைப் பெற ஓய்வூதியம் வரும் வரை காத்திருக்கும் வயதான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த முடிவால் பெரும் சிக்கலில் சிக்குவார்கள் என்று சங்கத்தின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே தெரிவித்துள்ளார்.
ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட ஓய்வூதியத்தால் பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் ஓய்வூதியத்தை இரத்து செய்வதால் ஏற்படும் சூழ்நிலையை பரிசீலிக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment