முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் மோசடி மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளில் கணிசமான உயர்வு காணப்படுகிறது என இலங்கை கணனி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்படும் விளம்பரங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment