சில அரசியல் குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக அரசியல்வாதிகளன்றி வடக்கிலும், தெற்கிலும் உள்ள அப்பாவி பெற்றோர்களின் பிள்ளைகளே பலியானதாகவும் தெரிவித்தார்.
தற்போதுள்ள சட்டங்கள் அதற்குப் போதுமானதாக இல்லாவிட்டால். சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டு இனவாதம் தோற்கடிக்கப்படும். சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
கல்னேவா மகாவலி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை ராமான்ய மகா பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
உடல் ரீதியாக எட்ட வேண்டிய வெற்றிகள் போன்றே ஆன்மீக ரீதியாகவும் அடைய வேண்டிய பல சாதனைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்ட காலமாக இரக்கம், கருணை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட தர்மத்தைப் போதித்து, அந்த தர்மத்தை செவிசாய்த்த ஒரு நாட்டிற்கு இன்று நேர்ந்துள்ள நிலைமையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment