Ads (728x90)

16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் யாசகம் எடுத்தல், தொழிலில் ஈடுபடுதல் மற்றும் 16 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வீட்டு வேலை உட்பட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தல் போன்றவற்றை ஜூலை முதலாம் திகதியிலிருந்து முழுமையாக தடை செய்ய காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகளை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

2022ஆம் ஆண்டு 39 ஆம் இலக்க சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் (திருத்தம்) சட்டத்திற்கு ஏற்ப 18 வயதுக்குக் குறைந்த சகல பிள்ளைகளும் சிறுவர்களாகக் கருதப்படுவதுடன், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கல்வி அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இது கட்டாயக் கல்வியைப் பெற வேண்டிய வயதாகக் கருதப்படும். 

16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பாடசாலை கல்விக்கு அனுப்பப்படாதிருந்தால் அதற்கு எதிராக சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதுடன் இன்று முதல் இந்த சட்டங்கள் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். 

வீதியில் யாசகம் எடுத்தல், வியாபாரத்தில் ஈடுபடுதல், அபாயகரமான தொழிலில் ஈடுபடுதல் அல்லது ஏதேனும் வேறு முறைகளில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 இலக்கம் அல்லது சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகத்தின் 109 அவசர அழைப்பு சேவைக்கு தெரிவிப்பதன் மூலம் நாட்டின் எந்த ஒரு பொலிஸ் நிலையத்தின் ஊடாக  நடவடிக்கை எடுக்குமாறு சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget