Ads (728x90)

தங்களது விசாரணைகளின் முடிவில் வழங்கப்படும் பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்கள், மாகாண மற்றும் பிரதான செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள், கூட்டுத்தாபன பிரதானிகள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளுக்கு இதனை நினைவூட்டும் வகையில் உத்தியோகபூர்வ தகவல் அனுப்பப்பட்டுள்ளது.  

மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 15(7) படி, பரிந்துரைகளை செயல்படுத்திய விவரங்களை நியமிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அரச நிறுவனங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பது கட்டாயமாகும். அதேநேரம் பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 17/2005 இல், இந்த சட்டப்பூர்வ கடமையை அரச நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

 சில நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், பரிந்துரைகளை செயல்படுத்த மறுத்து 'மேல்முறையீடு உள்ளது' எனக் கூறுவதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டித்துள்ளது.

சட்டத்தின் பிரகாரம், தங்களது பரிந்துரைகள் மீது மேல்முறையீட்டுக்கான வாய்ப்பு ஏதும் இல்லை எனவும், அதனைச் சுட்டிகாட்டி பரிந்துரைகளை செயல்படுத்துவதை தவிர்ப்பது சட்டவிரோதமானது எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எனவே அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சட்டப்பூர்வ கடமைகளை உணர்ந்து ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மதித்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget