Ads (728x90)

சீனிக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்தும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், அதன் முழுமையான ஆரோக்கிய நன்மைகளை அறிந்தவர்கள் குறைவுதான். வெள்ளை சீனிக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள் கிடைக்கும்.

வெல்லத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, செலினியம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால்தான் சித்த மருத்துவத்திலும் வெல்லத்திற்கு முக்கிய இடம் உண்டு.

வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தைச் சுத்திகரிக்கப் பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் உங்கள் சருமம் பொலிவு பெறுவதுடன், உடலும் ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படுகிறது.

இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு வெல்லம் ஒரு சிறந்த நிவாரணியாகச் செயல்படுகிறது. மேலும் தொண்டை புண், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக அமைகிறது.

உணவு அருந்திய பிறகு வெல்லத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், வெல்லம் செரிமான நொதிகளை சீராகச் செயல்படத் தூண்டுகிறது. இதனால், நாம் உட்கொண்ட உணவு எளிதில் உடைக்கப்பட்டு, விரைவாக ஜீரணமாக உதவுகிறது.

இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட வெல்லத்தை சீனிக்கு மாற்றாக தாராளமாக பயன்படுத்தலாம். இருப்பினும் சீனியோ வெல்லமோ எதுவாக இருந்தாலும், அளவோடு எடுத்துக்கொள்வதுதான் ஆரோக்கியத்திற்கு எப்போதும் நல்லது.


Post a Comment

Recent News

Recent Posts Widget