Ads (728x90)

2025 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் அமைச்சரவை ஒப்புதலுக்கு அமைய 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் - 2025' ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வருகின்றது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 

இத்திட்டம் இலங்கையில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கு மேம்பட்ட வருமானத்தை வழங்குவதன் மூலம் கூடுதல் நிதி ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை குடிமக்களுக்கு இது பொருந்தும். இந்தத் திட்டத்தின் கீழ் நிலையான வைப்புத் திட்டத்தை ஜூலை 1, 2025 முதல் டிசம்பர் 31, 2025 வரையிலான காலகட்டத்தில் திறக்கலாம். 

இத்தகைய அனைத்து வைப்புத்தொகைகளும் 12 மாத நிலையான வைப்பு காலத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைகளின் மொத்த மதிப்பு பங்கேற்கும் வங்கிகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒரு வைப்புத்தொகையாளருக்கு ரூபா 1 மில்லியனுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும். 

மேலும் ஆண்டுக்கு 1 மில்லியன் ரூபாய் நிலையான வைப்புகளுக்கு நடைமுறையில் உள்ள சந்தை வட்டி விகிதத்தை விட மேலதிகமாக 3 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget