மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் முறையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு தரமான மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்டத்தின் அனைத்து சுகாதாரப் பிரிவு தலைவர்களுடனும் ஒரு விசேட கலந்துரையாடலொன்றை நடத்தும் பொருட்டு இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, சத்திரசிகிச்சைக்கூடம், வைத்தியசாலை வாட்டுகள், அவசர சிகிச்சை பிரிவு, ஏனைய சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்தித் திட்டங்கள், அத்திட்டங்களின் தற்போதைய நிலைமைகள், எதிர்காலச் செயற்பாடுகள் என்பன விஷேடமாக ஆராயப்பட்டதுடன் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலன் குறித்தும் கண்டறியப்பட்டது.
இந்த கண்காணிப்பில், ஒவ்வொரு பிரிவுகளினாலும் வழங்கப்படும் நோயாளர் பராமரிப்பு சிகிச்சை சேவைகள் மற்றும் சுகாதார சேவைகளை வினைத்திறனாக்க வைத்தியசாலை பணிப்பாளர் உட்பட அதிகாரிகள், விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதிகள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன், பணிபுரியும் ஊழியர்களின் தற்போதைய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Post a Comment