ஒரு வகுப்பறையில் 50 அல்லது 60 பிள்ளைகளை வைத்துக் கொண்டு தரமான கல்வியை வழங்கவோ, பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்தவோ முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த சீர்திருத்தங்கள் பாடத்திட்ட மாற்றங்களை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது ஆசிரியர் பணித்திறன் மேம்பாடு, நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தியையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன.
இது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்ல எனவும் நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு தேசிய பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் கடந்த 16 ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டங்களில் எந்தவிதமான புதுப்பிப்பும் செய்யப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டாயமாக ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் எனவும், அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்த ஒரு கல்வி பேரவையை நிறுவுவதற்குத் தாம் முன்மொழிந்துள்ளதாகவும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Post a Comment