பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட சொகுசு கடுகதி ரயில் சேவையானது இன்று முதல் நாளாந்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும்.
அதேநேரம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடும் யாழ்தேவி ரயில் சேவையின் நேரத்திலும், இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.40க்கு யாழ்தேவி ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment