பாதாளக் குழுக்களுக்கு இடையிலான போதைப்பொருள் வியாபாரத்தின் விளைவாகவே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகிறது. 2024 ஆண்டு செப்பம்பர் மாதத்துக்கு பின்னர் தான் இலங்கையில் பாதாள குழுக்கள் தோற்றம் பெற்றதை போன்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
பாதாளக் குழுக்கள் தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சியினருக்கும் பாதாள குழுக்களுக்கும் இடையில் தொடர்புண்டு என்பதற்கு பல சம்பவங்கள் சாட்சியாக உள்ளன.
கடந்த காலங்களில் அரசியல் அனுசரணையுடன் பாதாள குழுக்கள் எழுச்சி பெற்றன. பாதாள குழுக்களின் முக்கிய தலைவர்கள் வெகுவிரைவில் கைது செய்து சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று எதிர்க்கட்சியினர் அரசியல் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது. பாதாள குழுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Post a Comment