Ads (728x90)

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த டிஜிட்டல் சேவைகள் வரியை கனடா அரசு இரத்து செய்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, அமெரிக்காவுடன் நடைபெறும் புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியாக இருக்குமெனவும், கனேடியர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை உருவாக்கும் முயற்சிக்கு இது ஆதரவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவானது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை திடீரென நிறுத்தியதையடுத்து வெளியானது.  

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளைச் சிறப்பாக முன்னெடுக்கும் நோக்கில் கனடா தனது டிஜிட்டல் சேவை வரியினை இரத்து செய்துள்ளது. 

 கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதிக்குள் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில், வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பார்கள் எனக் கனடாவின் நிதி அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget