பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரச நிதி மூலோபாய கூற்று வெளிப்படுத்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிதி ஒழுக்கம் மற்றும் நிதி வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை பேணாத காரணத்தால் தான் நாடு நிதியியல் ரீதியில் வங்குரோத்து நிலையடைந்தது. அரசாங்கம் நிதி ஒழுக்கத்தை சிறந்த முறையில் பேணுகிறது.
கடந்த கால ஊழல் மோசடிகளால் இடைநிறுத்தப்பட்ட ஜப்பான் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதலீடுகள் ஏதும் இல்லை என்று குற்றஞ்சாட்டுகின்றவர்கள் கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரிடம் உண்மையை தெரிந்துக் கொள்ளலாம்.
எதிர்க்கட்சியினர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சி என்பதால் அனைத்தையும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் புதிய அரசாங்கம் இலங்கை நாடுகள் உட்பட உலக நாடுகளுக்கு பரஸ்பர தீர்வை வரி விதித்ததை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
இந்த வரி விதிப்பால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்கள் குறுகிய அரசியல் நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பு வெற்றிப்பெறவில்லை.
ஈரான்-இஸ்ரேல் பிரச்சினையை தொடர்ந்து இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்க்கட்சியினர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்கள்.
எதிர்க்கட்சிகளுக்கு சார்பாக செயற்படும் ஊடகங்கள் இதனைப் பெரிதுபடுத்தின. இந்த நெருக்கடியையும் சிறந்த முறையில் எதிர்க்கொண்டுள்ளோம்.
இலங்கைக்கு எவ்வித வெளிநாட்டு முதலீடுகளும் வரவில்லை என்று குற்றஞ்சாட்டுபவரின் மாமனார் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தில் செய்த ஊழல் மோசடிக்கு தற்போது சிறையில் உள்ளார்.
ஊழல்வாதிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டியவர்கள், ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை இன்று அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுகிறார்கள். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment