இதன்போது ஜனாதிபதி நாட்டின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகளை எடுத்துரைத்ததாகவும், முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சூழலை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய நிறுவனங்களிடமிருந்து அதிகரித்துவரும் ஆர்வத்தையும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புகளையும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வரவேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில், இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது விடுத்த அழைப்பைத் தொடர்ந்து அந்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment