Ads (728x90)

மேல் மாகாணத்தில் இன்று முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். 

இத்திட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் ஆயிரம் பேருக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

டிஜிட்டல் விவகார அமைச்சின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக இந்தத் திட்டம் மிக விரைவாக ஆரம்பிக்க முடிந்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

அடுத்த சில மாதங்களில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் கையடக்க தொலைபேசிகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget