Ads (728x90)

மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். 

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் அரச மரியாதைக்கான வரவேற்பில் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு கலந்துகொண்டார். 

ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக மாலைதீவு வெலானா சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் வருகை முனையத்தில் சிறுமிகள் குழுவொன்று அழகிய கலாசார நடனத்தை நிகழ்த்தியது. ஜனாதிபதி அந்த சிறுமிகளுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த அரச விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget