30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், முதல் தொகுதி விரைவில் இலங்கையிலிருந்து வெளியேற உள்ளதாகவும் தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் பொங்கவின் ஜங்ருங்ருங்ராங்கிட் தெரிவித்துள்ளார்.
வயதானோர் சனத்தொகை மற்றும் சுருங்கி வரும் தொழிலாளர் சக்தி காரணமாக, நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை அனுமதிக்கவும் தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய எல்லை மோதல் காரணமாக 300,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்ததுடன், தாய்லாந்தை விட்டு சுமார் 400,000 கம்போடியர்கள் வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில்,விவசாயம், நிர்மாணம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகள் சுமார் 3 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டியுள்ளதாக சர்வதே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment