இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்களின்படி 2025 ஓகஸ்ட் 18 வரை மொத்தம் 1,500,656 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2025 ஓகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 132,368 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும், மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 174,608 சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் 132,919 சுற்றுலாப் பயணிகளும், ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகளும், ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Post a Comment