Ads (728x90)

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று தபால் தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் அறிவித்துள்ளன. 

ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் தபால் தொழிற்சங்கங்கள் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளன. 

19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்கங்கள் நேற்று பிற்பகல் முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget