Ads (728x90)

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்கள் நேற்று உயர் நீதிமன்றத்தால் விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டன.

அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய இருவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு இந்த தீர்ப்பை அறிவித்தனர்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு, வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளல் மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான பல்துறை மானிய உதவி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டன.

இந்த ஒப்பந்தங்களை செல்லுபடியற்றதாக்கக் கோரி வைத்தியர் குணதாச அமரசேகர மற்றும் வினிவித பெரமுன உள்ளிட்ட தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget