Ads (728x90)

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ் மா அதிபராக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க புதிய பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று வழங்கி வைத்தார்.

முன்னதாக இந்த நியமனத்துக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி இலங்கையின் 37ஆவது பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget