Ads (728x90)

தூரப் பிரதேசங்களுக்கான சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு கெமரா கட்டமைப்பைப் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கதிர்காமத்தில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 

முதற்கட்டமாக 40 செயற்கை நுண்ணறிவு கெமரா கட்டமைப்புகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பேருந்து சாரதிகளின் நடத்தைகளைக் கண்காணிக்கவும், தேவையான எச்சரிக்கை சமிஞ்சைகளை வழங்கவும் குறித்த கெமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. 

இந்த திட்டத்தின் கீழ் பொருத்தப்படும் செயற்கை நுண்ணறிவு கெமராக்கள் ஊடாக சாரதிக்கு ஏற்படக்கூடிய சோர்வு, மயக்கம் மற்றும் கண் மூடும் நிலைகளை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூரப் பிரதேசங்களுக்கான சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்திற்கும் விரைவில் செயற்கை நுண்ணறிவு கெமராக்கள் முழுமையாகப் பொருத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget