160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
2003 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாகச் சேவையில் இணைந்த சசிதேவி ஜலதீபன் முன்னர் திருகோணமலை மற்றும் திம்புலாகல பிரதேச செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பொருளாதாரக் கொள்கைகள் இராஜாங்க அமைச்சு மற்றும் நிதி, மூலதனச் சந்தைகள் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சகங்களில் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும், திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வை திணைக்களத்தின் பணிப்பாளராகவும், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் மேலதிக செயலாளராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

Post a Comment