முத்தையன்கட்டுக் குளத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர், அப்பகுதி இளைஞர்களை இராணுவ முகாமிற்குள் அழைத்து தாக்கியுள்ளதாகவும், அவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரை இராணுவத்தினர் குளத்தில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்து நிலை கொண்டு இருப்பதனால் தான் அவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
எனவே வடக்கு-கிழக்கில் காணப்படும் இராணுவ பிரசன்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு-கிழக்கு மாகாணம் தழுவி பாரிய கடையடைப்பு போராட்டத்தை 15ஆம் திகதி நடாத்தவுள்ளோம்.
எனவே அதற்கு எதிராக அன்றைய தினம் முன்னெடுப்படும் கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி முல்லைத்தீவு–ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தையன்கட்டுப் பகுதியில் 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தார். பின்னர் கடந்த சனிக்கிழமையன்று, அவரது சடலம் முத்தையன்கட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment